2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தமிழ்மாணவர்கள் சுதந்திரமாக உலாவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

Niroshini   / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்
“தமிழ் மாணவர்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத சூழல் வட, கிழக்கில் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வது திட்டமிட்ட சதியே” என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அம்பிளாந்துறை கனிஷ்ட வித்தியாலய மாணவர்களை பாராட்டும் விழாவும் ஆசிரியர் தினவிழாவும் திங்கட்கிழமை(24) அதிபர் க.தவராசா  தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதமஅதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது திட்டமிட்டு அவர்களை குறிவைத்து பொலிஸார் வேண்டுமென்றே கொலை செய்துள்ளளனர். இந்தச் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன், குறித்த பொலிஸாருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் பல சிரமத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு அறிவூட்டல் செய்கின்றனர்.
அர்ப்பணிப்புடன் மாணவர்களை முன்னேற்றும் பொறுப்பை அவர்கள் மேற்கொள்கின்றனர். அவர்களை நாம் பாராட்ட வேண்டும். மாணவர்களின் ஒழுக்கம் பெற்றோர்களின் வழி நடத்தலிலும் தங்கியுள்ளது.

ஒழுக்கம் நிறைந்த கல்வியே மாணவர்களை சமூகத்தை வழிப்படுத்த உதவும். பரீட்சையில் சித்தியடையும்
கல்வியை விட வாழ்க்கையில் சித்தியடையும் கல்வியே இன்று தேவையாகவுள்ளது.

கலைமகள் மகா வித்தியாலயம் 1ஏ தர பாடசாலையாக தரம் உயர்தப்பட்டதும் எனது
முயற்சி என்பதை இவ்விடத்தில் கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
தோல்வியும் வெற்றியும் ஒரு மனிதனுக்கு எப்போதும் வரக்கூடியது தோல்வியடைந்தவர்கள்.
வெற்றி பெற்ற வரலாறுகள் பல உள்ளன.

ஒரு மனிதன் செய்த சேவைகளை மதிக்கின்ற பக்குவம் எமக்கு ஏற்பட வேண்டும். மாணவர்களுக்கு நன்றி உணர்வுகளையும் வரலாறுகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள், மாணவர்கள் மீது எப்போதும் கண்காணிப்பாக இருக்க வேண்டும். இன்று வட, கிழக்கு மாணவர்களின் ஒழுக்கத்தை சீரழிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதை பெற்றோர்கள் உணர்ந்துகொள்வதுடன், அவர்களின் ஒழுக்க விழுமியங்களிலும் ஆசிரியர்களுக்கு பூரண ஒத்துழைப்பை பெற்றோர் வழங்க முன்வரவேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X