Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 ஜூலை 18 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர், தாமரைக்கேணி தோட்டமொன்றில் நேற்று மாலை தீ ஏற்பட்டுள்ளது.
இவ்வனர்த்தத்தால் தோட்டத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் மா மரங்கள் உள்ளிட்ட மரங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
ஏறாவூர், தாமரைக்கேணி ரயில் பாதைக்கு அருகிலுள்ள எம்.சியாத் என்பவருக்குச் சொந்தமான தோட்டமே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.
இது தொடர்பாக தோட்ட உரிமையாளர், முறைப்பாடு செய்துள்ளார் எனவும், இது ஒரு நாசகார வேலையா அல்லது வேறு காரணங்களால் தோட்டம் தீப்பற்றியதா என்பது பற்றி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .