Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு, தாழங்குடா கல்வியியல் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக, கல்லூரியின் உப பீடாதிபதியாக இருந்த கே.புண்ணியமூர்த்தி, கல்லூரியில், உத்தியோகபூர்வமாக இன்று (30) பதவியேற்றுக்கொண்டார்.
இக்கல்லூரியில் 5 வருடங்களுக்கு மேலாக பீடாதிபதியாகச் சேவை வகித்த எஸ்.ராஜேந்திரன், தனது 60ஆவது வயதில், நேற்று (29) ஓய்வுபெற்றார்.
இந்நிலையில், கல்வியியல் கல்லூரியின் நான்காவது பீடாதிபதியாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள புதிய பீடாதிபதியை வரவேற்கும் நிகழ்வு, கல்லூரியில் நடைபெற்றது.
இதன்போது, ஓய்வுபெற்றுச் செல்லும் முன்னாள் பீடாதிபதி எஸ்.இராஜேந்தின், தமது பொறுப்புகளைக் கையளித்ததுடன், தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், புதிய பீடாதிபதிக்கும் ஒய்வுபெற்றுச் செல்லும் பீடாதிபதிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
40 minute ago
42 minute ago
51 minute ago