Editorial / 2022 பெப்ரவரி 04 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு முருகன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள வீதிக்கு அருகில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (04) வெள்ளிக்கிழமை காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு இன்றுக் காலை 6 மணியளவில் சென்ற பொலிஸார் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago