2025 மே 01, வியாழக்கிழமை

திருடிய தையல் இயந்திரங்களை மீண்டும் வைத்த திருடன்

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

திருடிய மூன்று தையல் இயந்திரங்களை திருட்டுப் போன இடத்தில் திருடன் மீண்டும் வைத்துச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை விசேட தேவையுடையோர் பாடசாலையில் இருந்த மூன்று தையல் இயந்திரங்களும்  திருடப்பட்டிருந்தன. இதனை அறிந்து கொண்ட பாடசாலை நிர்வாகத்தினர் இத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சிலரிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு பொலிஸாரிடம் ஒப்படைத்து அவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

குறித்த தகவலை அறிந்து கொண்ட திருடன், திருடப்பட்ட மூன்று தையல் இயந்திரங்களையும்  திருடிய இடத்தில் மறுநாள் வைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .