2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

திருட்டுச் சம்பவங்கள்; இருவர் கைது

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ் 

மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவிலுள்ள சில பிரதேசங்களில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த திருட்டுச் சம்பவங்களின் சந்தேகநபர்கள் இருவர், நேற்று (05) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே.ஜயந்த தெரிவித்தார்.

இவர்களிடமிருந்து தங்க ஆபரணங்கள், மலிகைக்கடை பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஏறாவூர்ப் பொலிஸ் குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி ஜி.உதயகுமார தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கொம்மாதுறை, செங்கலடி, எல்லை வீதி  ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள மலிகைக்கடைகளில் பெருந்தொகையான பொருள்களைக் கொள்ளையிட்ட நபரிடமிருந்து அப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கிரான் கோரகல்லிமடு பிரதேச வீடொன்றில் சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான  தங்க ஆபரணத்தைக் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு ஏற்கெனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றுமொரு நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்த ஆபரணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .