Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எறாவூர், நகர பிரதேசத்தில் அதிகரித்துள்ள தெருநாய்களை விலங்கு விசர் தடுப்பூசி ஏற்றி அதன்மூலம் மனிதர்களை விசர் நாய்க்கடியிலிருந்து பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படுவதாக ஏறாவூர் நகரபிதா இறம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.
இது தொடர்பாக, இன்று (16) மேலும், கருத்துத் தெரிவித்த அவர்,
இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையில், இதுவரை சுமார் 50 இற்கு மேற்பட்ட தெருநாய்களை விரட்டிப் பிடித்து அவற்றுக்கு ரேபீஸ் எனப்படும் விலங்கு விசர் நோய் ஏற்படாத தடுப்பூசி ஏற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஏறாவூர் - புன்னைக்குடா வீதியில், சில நாட்களாக பொதுமக்கள் விசர்நாய் கடிக்கு உள்ளானதை கருத்தில் கொண்டு ஏறாவூர் நகர சபையும் மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அதிகாரிகளும் இணைந்து இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் தொடர் நடவடிக்கை அடுத்துவரும் தினங்களில், மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் தெரு நாய்களுக்கு, விலங்கு விசர் நோய் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதுடன், இது தொடர்பில், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
8 hours ago
8 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Aug 2025