Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
71 ஆண்டுகால ஏமாற்று, தோல்வியடைந்த, திறமையற்ற அரசியல் துயரத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு, நாட்டு மக்களுக்குத் தாம் பகிரங்க அறைகூவல் விடுப்பதாக, மக்கள் சக்தி இயக்கம், மட்டக்களப்பில் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று (14) விநியோகிக்கப்பட்டுள்ள அந்த பிரசுரத்தில், இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நல்லதோர் தேசத்தையும் மக்களையும் கட்டி எழுப்ப வேண்டும், அதற்கு உண்மையான, முற்போக்கான, மனிதாபிமான, ஜனநாயக இடதுசாரி சக்திகளுடன் நாட்டு மக்கள் கைகோர்க்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, தேசிய பாதுகாப்பு எனும் போர்வையில் கொண்டு வரப்படுகின்ற அனைத்து அடக்குமறைச் சட்டங்களையும் நிராகரிக்க வேண்டுமெனவும் எந்தவோர் அரசியல் தலையீடும் இல்லாமல் சட்டம் சுயாதீனமாக்கப்பட வேண்டும் என்பதே தமது குறிக்கோளாகுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, “எந்தவொரு சமூகத்தையும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை தடுத்து, ஒரு புதிய ஜனநாயக முற்போக்கு மக்கள் நல ஆட்சியை உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பது எங்கள் நோக்கமாகும்” என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago