2025 மே 09, வெள்ளிக்கிழமை

தாக்குதலுக்குள்ளான இருவர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை நேற்று வியாழக்கிழமை முடிந்த நிலையில் மை வீசி தமது சந்தோஷத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த மாணவர்கள் மீது வீதியால் வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டதைத் தொடர்ந்து, இரண்டு மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பரீட்சை இறுதி நாளான நேற்று நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வீதியில் ஒருவருக்கொருவர் மையடித்துக்கொண்டிருந்த வேளை, வீதியால் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உட்பட மேலும் சிலர் எங்கள் மீது சாரமாரியாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.  தாங்கமுடியாத வலியுடன் தாங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X