2025 மே 08, வியாழக்கிழமை

தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம்; இம்மாத இறுதிக்குள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 'துருனு சிரம சக்தி'  தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம் பூர்த்தியாக்கப்பட்டுஇ இம்மாத இறுதிக்குள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என்.நைறூஸ் ஞாயிற்றுக்கிழமை  தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு இளைஞர் நாடாளுமன்றத்துக்கு இணையாக 'துருனு சிரம சக்தி' எனும் பெயரில் இம்மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பிரதேச செயலகம் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு வேலைத்திட்டங்கள் படி 28 தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு வேலைத்திட்டமும் தலா ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியானவை.  

இதன் கீழ் வீதிகள், பொதுநோக்கு மக்கள் ஒன்றுகூடல் மண்டபங்கள், வாசிகசாலைகள், பாலர் பாடசாலைகள் ஆகியவை புனரமைத்தல் மற்றும் புதிதாக அமைக்கும் வேலைத்திட்டங்கள்  ஆரம்பித்து வைக்கப்பட்டன.
 
இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் மத்தியில் செயலூக்கம் கொண்டவர்களாக மாற்றுவதே 'துருனு சிரம சக்தி' எனும் தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நோக்கமெனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X