Suganthini Ratnam / 2016 மே 16 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
ஐவா தேசிய தாதிய பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் தாதிய பயிற்சிகளை முடித்துக்கொண்ட தாதியர்களுக்கு சான்றிதழ் மற்றும் தாதிய தொப்பிகள் அணிவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
கல்வியை நிறைவு செய்துகொண்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஐவா தேசிய தாதிய பயிற்சி நிறுவனம் நாடாளாவிய ரீதியில் இளைஞர், யுவதிகளுக்கு தாதியப் பயிற்சிகளை வழங்கி அதனூடாக வேலைவாய்ப்பினை வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பெற்றுக்கொள்ள வழிவகை செய்கின்றது.
இதன் ஒரு செயல்திட்டமாக ஐவா தேசிய தாதிய பயிற்சி நிறுவனம் வடக்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த 150 இளைஞர், யுவதிகளுக்கு தாதிய பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கான சான்றிதழ்களையும் தாதிய தொப்பிகளையும் வழங்கியது.


1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago