Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்னா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை அப்பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது இப்பிரதேசத்தின் நன்மை கருதி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்குரிய களுவாஞ்சிக்குடியிலுள்ள காணியில் 40 அடி நீளம் கொண்ட காணித்துண்டை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு வழங்குதல், மிக நீண்டகாலமாக களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இருந்துவரும் விசேட அதிரடிப் படை முகாமை அவ்விடத்திலிருந்து அகற்றுதல், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் முன்னாலுள்ள ஆலமரத்தை வெட்டி அகற்றுதல், இந்த வைத்தியசாலைக்குத் தேவையான வைத்திய நிபுணர்களைப் பெற்று இவ்வைத்தியசாலையை மாகாண வைத்தியசாலையாகத் தரம் உயர்த்துதல், கல்வித்துறையிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், மகிழூர் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமித்தல், இப்பிரதேசத்தின் மாகாண நீர்ப்பாசனக் குளத்திலுள்ள சாப்பைப் புற்களை அகற்றுதல், 2000 மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை அமுல் செய்தல், மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபையில் காணப்படும் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதியை வீதிப் புனரமைப்பு, குடிநீர் பிரச்சினைக்கு பயன்படுத்தல், மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச சபையை நகர சபையாக தரம் உயர்த்தல், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் இப்பிரதேசத்தில் தடையற்ற நீர் வழங்கலை மேற்கொள்ளுதல், மலசலகூடக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுத்தல், பொது இடங்களிலும் வீதிகளிலும் 200 மின் விளக்குகளைப் பொருத்தல்,
1,750 கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் 500 கோழி வளர்ப்பாளர்களுக்கும் தேவையான உதவிகளை மேற்கொள்ளுதல், களுவாஞ்சிக்குடி பிரதான வீதியிலுள்ள விசேட அதிரடிப் படை முகாமை அவ்விடத்திலிருந்து அகற்றி வேறு இடத்துக்கு மாற்றுதல் பேன்ற பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் கிராமிய பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவிக்கையில், 'நீண்டகாலமாக காணப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மீன் ஏற்றுமதிக்கான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளமை இந்நாட்டுக்கு ஒரு புதிய அங்கிகாரத்தையும் ஏற்றுமதித் துறையில் ஒரு புதிய முனைப்பாகவும் அமைக்கின்றது' என்றார்.
'மனித உரிமை மீறல்கள் விடயத்தில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக சில சர்வதேச குறியீடுகள் குறிப்பிடுகின்றன. இவைகளெல்லாம் இந்த நாட்டில் ஏற்படுகின்ற நல்லாட்சியை மக்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். நல்லாட்சி மிகவும் திறம்பட இடம்பெறுகின்றது என்பதையே சுட்டி நிற்கின்றன' என்றார்.
இதேவேளை, மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மண்முனைப் பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன், இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.


3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago