2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

திருட்டுக் குற்றச்சாட்டில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 11 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடிக் கடற்கரையில் கடந்த 2016.02.08 அன்று திருடப்பட்ட பல்சர் மோட்டார் சைக்கிள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தீர்க்கப்படாத குற்றச்செயல்கள் விசாரணைப்பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.ஏ.வஹாப் தெரிவித்தார்.

குறித்த பல்சர் மோட்டார் சைக்கிள் காணாமல் போனதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட  மட்டக்களப்பு மாவட்ட தீர்க்கப்படாத குற்றச்செயல்கள் விசாரணைப் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை மாலை 26 மற்றும் 40 வயதுடைய  இரண்டு சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடம் பெற்ற வாக்கு மூலத்திற்கு அமைய ஆரையம்பதியில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் கடையில் இருந்து மோட்டார் சைக்கிளின் உதிரிப்பாகங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.ஏ.வஹாப் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X