Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நகை திருட்டுப் போன சம்பவம் தொடர்பில்; ஒருவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையுடன், அபராதமும் விதித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா தீர்ப்பளித்துள்ளார்.
20.08.2014ஆம் ஆண்டு மட்டக்களப்பு, பூம்புகார் நகர் 07ஆம் குறுக்குத்தெருவை அண்டியுள்ள வீடொன்றில் 20000 ரூபாய் பெறுமதியான நகை திருட்டுப் போயிருந்தது.
இத்திருட்டு சம்பந்தமாக அதே இடத்தைச் சேர்ந்த மேற்படி நபர்; மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், குறித்த திருட்டு சம்பந்தமான வழக்கில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் நேற்று வியாழக்கிழமை, குறித்த நபருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையுடன், 20000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago