2025 மே 08, வியாழக்கிழமை

திறப்பு விழாவும் ஒன்று கூடல் நிகழ்வும்

Gavitha   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்ட திறன் அபிவிருத்தி பயிற்சி நிலைய திறப்பு விழாவும் கிராம அபிவிருத்தி அலுவலக நலன் புரிச்சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல்  நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை (07) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கே . மோகன் பிறேம்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட முதலமைச்சர் மற்றும் உள்ளூராட்சி கிராம அபிவிருத்தி, கட்டடம், கிராமிய கைத்தொழில்,  போக்குவரத்து, வீடமைப்பு, சுற்றாடல் அமைச்சின் செயலாளர்  ஜனாப்.யு.எல்.எ. அஸீஸினால் மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலக கட்டட தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்டதிறன் அபிவிருத்தி பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தில், 2015ஆம் ஆண்டு சிறப்பாக சேவையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களும் திணைக்களத்தில் சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற  உத்தியோகத்தர்களும்  இதன்போது கௌவிக்கப்பட்டனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X