2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தொழில்நுட்பவியல் பட்டப்படிப்புக் கற்கை

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 05 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா

இவ்வருடம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்புக்; கற்கைநெறி  ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதற்காக  83 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அப்பல்கலைக்கழகப் பதிவாளர் வி.காண்டீபன்  தெரிவித்தார்.

மேலும், இப்பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பீடம் அமைப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளது.  

இதில் உயிரியல் முறைமைத் தொழில்நுட்பவியல் துறை மற்றும் பல்துறைக் கற்கைகள் துறை ஆகிய இரு துறைகள் ஆரம்பத்தில் அமைக்கப்படும். இதன் பின்னர் சக்தி மற்றும் சூழல் துறை, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் துறை ஆகிய இரு துறைகளும்  இணைக்கப்படும்.
   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X