2025 மே 05, திங்கட்கிழமை

நகர சபை உறுப்பினருக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 மே 25 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, காத்தான்குடி நகர சபை தவிசாளர் உட்பட சில உறுப்பினர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக காத்தான்குடி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி உறுப்பினர் தானாக முன் வந்து அன்டிஜன் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். இதன்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து இவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் உட்பட சில உறுப்பினர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை, ஏனைய உறுப்பினர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X