2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நஞ்சற்ற பயிர்ச்செய்கையை மேற்கொள்ள துரித நடவடிக்கை

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 பெப்ரவரி 01 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில், நஞ்சற்ற பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான துரித நடவடிக்கைகளை விவசாய அமைச்ச்சு ஆரம்பித்துள்ளது.

இதன்மூலம், பொதுமக்கள் பல்வேறு விதமான நன்மைகளை அடைய முடியுமென, விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) காலை நடைபெற்ற மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் உயர்மட்ட மாநாட்டில்  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்,  மாவட்ட விவாயத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் எம்.இக்பால், விவாய தணைக்கள உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், விவசாய அமைப்புளின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .