2025 மே 12, திங்கட்கிழமை

நற்செயல் புரிந்த மாணவனுக்கு பாராட்டு

Kogilavani   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தை கண்டெடுத்து அதனை உரியவரிடம் சேர்ப்பிக்குமாறு விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸிடம் ஒப்படைத்த மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  அம்மாணவன் கல்வி பயிலும் பாடசாலையான கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் திங்கட்கிழமை   இடம்பெற்றது.

மேற்படி பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயிலும் எஸ்.எச்.இஹ்ஸான் என்ற மாணவனே பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரத்தையொட்டிய இறுதி நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன.

அப்போது மைதானத்தில்  அநாதரவாக கிடந்த பணப்பையை மேற்படி மாணவன் கண்டெடுத்துள்ளார்.   

அதனைப் பிரித்து பார்த்தபோது அப்பொதியினுள் பெரும் தொகை பணம் இருப்பதனை கண்டு எவரிடமும் கூறாமல் நேரடியாக மைதானத்தின் மேடையில் அமர்ந்திருந்த பிரதியமைச்சர் ஹரிஸிடம் அதனை  ஒப்படைத்துள்ளார்.

இம்மாணவனின் நற் செயலை மேடையில் வைத்தே பாராட்டிய பிரதியமைச்சர், கல்முனை பொலிஸாரின் உதவியுடன் அப் பணத்தை உரியவரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

திங்களன்று பாடசாலைக் காலைக்கூட்டத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் உட்பட  ஆசிரியர்கள், மாணவர்களும் இம்மாணவனை பாராட்டி வாழ்த்தி பரிசு வழங்கி கௌரவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X