2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

‘நல்லுறவைச் சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை’

Editorial   / 2017 நவம்பர் 01 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டத்தையும் சமூக நல்லுறவையும்  சீர்குலைக்கும் வகையில் செயற்படுவோருக்கெதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு,   பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஜாகொட ஆராச்சி சகல, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு, நேற்றுப் பணித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்தசில நாட்களாக ஓர் இனத்தைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கெதிராக போலி பேஸ்புக் மூலமாகவும் நேரடியாகவும் சிறுபான்மையின நல்லுறவைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்களில் சிலர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அவ்வானவர்கள் விரைவில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனரெனவும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் நல்லுறவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள்  தொடர்பாக ஆராய்வதற்காக, ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் நேற்று (31) உயர்மட்ட மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர, உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகிய பொலிஸ் அதிகாரிகளுடன்  ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் மௌலவி எம்எல் அப்துல் வாஜித் மற்றும் வர்த்தகர்கள் சமூக முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராச்சி கருத்துத் தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வியாபார நடவடிக்கைகளுக்காக வழக்கம்போல சென்றுவருவதை வியாபாரிகள் நிறுத்தக்கூடாது. அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை, பொலிஸார் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

“நிலைமை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை வெளிப்பிரதேச சந்தைகளுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக, வர்த்தகர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். அவ்வாறு இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக வர்த்தக நடவடிக்கைள் நடைபெறவேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .