Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக, நாட்டில் நல்லிணக்கம் இல்லாமற் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்த, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, அதை மீளக் கட்டியெழுப்புவதே அனைவரினதும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட கடமையாக இருக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையோடு முன்னெடுக்கப்படும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதச் செயற்குழுவின் செயற்பாடுகள் பற்றிய அமர்வு, கிறீன் கார்டன் விடுதியில், இன்று (25) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சர்வமதச் செயற்குழுவின் இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த மதப் பிரமுகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர், "எமது நாடு, கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தேசிய ரீதியான முரண்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்திருக்கிறது. பகைமையிலிருந்து மீண்டெழுவதற்கான உபாயங்களை, நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
யுத்தத்துக்கு முன்னரான காலங்களில், நாட்டு மக்களிடையே இருந்து வந்த சகவாழ்வு, மீண்டும் நிலைபெற வேண்டும் என்பதே சமாதான ஆர்வலர்களின் ஆதங்கமாக இருந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்காகவே, தேசிய ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க வேண்டும் என்பதற்காக, நல்லாட்சி அரசாங்கம், அதற்கென ஓர் அமைச்சையும் உருவாக்கியுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் பேசப்படும் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளையும் பரஸ்பரம் கற்றுக்கொண்டு, இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு, புரிந்துணர்வுக்காகப் பாடுபட வேண்டுமென்றும் பிரதியமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago