2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நாய் கடித்ததில் குழந்தை காயம்

Editorial   / 2018 மார்ச் 26 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர், வைத்தியசாலையில் வைத்து இரண்டரை வயதுடைய ஆண் குழந்தை குழந்தையை, நாய் கடித்ததில் அக்குழந்தை காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரைப்  பார்ப்பதற்காக தாயும் குழந்தையும், நேற்று (25) மாலை சென்றுள்ளனர். அங்குள்ள, சிறுவர் பூங்காவில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது, நாயொன்று, குழந்தையின் கால்களைக் கடித்துள்ளது.

இதனால், காயத்துக்குள்ளான குறித்த குழந்தை, ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X