Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வா.கிருஸ்ணா / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
2007ஆம் ஆண்டு படையினரால் சேதமாக்கப்பட்ட மட்டக்களப்பு படுவான்கரையின் மகிழடித்தீவிலுள்ள உயிர்நீர்த்தவர்களின் நினைவுத்தூபியை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள், நேற்று முனத்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1987ஆம் ஆண்டு 1ஆம் மாதம் 28ஆம் திகதி, மகிழடித்தீவில் உள்ள இறால் பண்ணையில் வேலையில் இருந்தவர்கள் 168 பேர், இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்கள் நினைவாக கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் மகிழடித்தீவு சந்தியில் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக படுகொலை நினைவு கூரப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 2007ஆம்ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் படை நடவடிக்கை மூலம் விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், குறித்த நினைவுத்தூபியும் சேதமாக்கப்பட்டது.
கடந்த காலத்தில் குறித்த படுகொலை நினைவுகூரப்பட்டுவந்த நிலையிலும் நினைவுத்தூபி புனரமைக்கப்படாத நிலையிலேயே இருந்துவந்தது. இது தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து அதன் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
13 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
3 hours ago