Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 25 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு — கல்முனை பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமென்றிலிருந்து ஆவணங்கள் அடங்கிய பையை பட்டப் பகலில் கொள்ளையிட்ட நபரை, இன்று (25) காலை கைதுசெய்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கல்லடி பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் முன்னால் நேற்று முன்தினம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா வானத்திலிருந்து 48,000 ரூபாய் பணம், காசோலைகள், ஆவணங்கள் உள்ளிட்டவை கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின்போது குறித்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகிலும் முன்னாலும் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன், சந்தேநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்த கொள்ளையிடப்பட்டிருந்த பணம், பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
01 May 2025