Janu / 2025 ஜனவரி 05 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெற்றோரின் கவனயீனம் காரணமாக நீர் நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் சனிக்கிழமை (04) மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று இளைஞர் விவசாய திட்டத்தில் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய முருகேசு விகான் என்னும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த நீர்நிலைக்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து குழந்தை தத்தி நடந்துவந்து விளையாடிக்கொண்டிருந்த போது நீரோடைக்குள் வீழ்ந்துள்ளதுடன் குழந்தையை பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொன்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .