Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 20 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு -உறுகாமக்குளத்திலிருந்து வயல்நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சல் செய்யப்பட்டு வந்த வாய்க்காலை மறித்து சங்குலக்குளம் கட்டப்பட்டதால் சுமார் 3,500 ஏக்கர் வயல் நிலங்களுக்கான நீர்ப்பாசனம் தடைப்பட்டுள்ளதைக் கண்டித்து, விவசாயிகள், இன்று (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலுப்படிச்சேனை பிரதேசத்தில் நடைபெற்ற இந்தஆர்ப்பாட்டத்தில், தமது கோரிக்கை அடங்கிய வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திநின்ற பல விவசாயிகள், கோஷங்களையெழுப்பினர்.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள சங்குலக்குள நீர்ப்பாசனத்துக்காக சிறிய குழாய்கள் மாத்திரம் பொருத்தப்பட்டுள்ளதால், பழவெட்டான், தளவாய், பாலகன்வெளி, கூமாச்சோலை, தம்பானம்வெளி, கயிருவெளி ஆகிய கண்டங்களிலுள்ள வயல் நிலங்களுக்கு போதியளவு நீர் கிடைப்பதில்லையென, விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
போதியளவில் நீர் கிடைக்காமையால், கடந்த நெற்செய்கையின்போது, 25 சதவீதமான அறுவடையையே பெற்றுக்கொண்டதாக, விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
எனவே, இந்த வாய்க்காலுக்கு ஆறு அடி நீளமான மூன்று கதவுகளைப் பொருத்தும் பட்சத்தில், விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தைப் பெற்றுக்கொள்வது மாத்திரமின்றி, இக்குளத்தை நன்னீர் மீன்பிடியாளர்களும் பயன்படுத்த முடியுமென, விவசாயிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago