2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நூல் வெளியீட்டு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், வ.சக்தி, ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், இ.சுதாகரன்

இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரியும் செட்டிபாளையம் திருவருள் சமூக மேம்பாட்டு அமைப்பின் ஆலோசகருமான கலாநிதி எஸ்.அமலநாதனால் எழுதப்பட்ட "இலங்கையின் அரச அலுவலக நிர்வாகமும் சமகால நடைமுறைகளும்" எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு, மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 02 மணியளவில் நடைபெறவுள்ளது.

இறைவரித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளரும் சட்டத்தரணியுமான மு.கணேசராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வின் முதன்மை அதிதிகளாக பின்தங்கிய கிராமப் பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சந்திரகாந்தன், கோ.கருணாகரம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். 

சிறப்பு அதிதிகளாக அமைச்சின் செயலாளர் அ.சேனநாயக்க, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் க.கருணாகரன், பதில் நீதிபதியும், சட்டத்தரணியுமான க.பேரின்பராசா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். 

நூலாசிரியர் அமலநாதன், அலுவலக நிர்வகிப்புத் தொடர்பாக தேசிய மட்டம் வரை பல உற்பத்தித்திறன் விருதுகளை வென்றுள்ளதுடன், நிர்வகிப்புத் தொடர்பாக 34க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று நிர்வாக அறிவூட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X