2025 மே 09, வெள்ளிக்கிழமை

நாசிவன்தீவுக் கிராமத்தில் அபிவிருத்திகள்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 07 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, நாசிவன்தீவுக் கிராமத்தில் மீன்பிடித் துறைமுகமொன்றும் தும்பு உற்பத்தி நிலையமொன்றும்  நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு மாகாண விவசாயம் மற்றும்  மீன்பிடித்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மேலும், இக்கிராமத்தில் மீனவர் தங்குமிடம் நிர்மாணிப்பதற்கும் உடனடியதாக ஆவண செய்வதாகவும் அவர் கூறினார்
 
நாசிவன்தீவுக் கிராம மக்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறியும் வகையில் புதன்கிழமை (06) மாலை அம்மக்களுடன் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
 
சுனாமிப் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான வீடுகள் சரியான முறையில் அமைக்கப்படாமையினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளமை, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற பலர் சமூர்த்தித் திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படாமை, விவசாயச் செய்கைக்கு காணி வழங்கப்பட வேண்டும், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும், வீதிகள் மற்றும் மதகுகள் புனரமைக்கப்பட வேண்டும், தும்பு உற்பத்தி நிலையம் அமைக்கப்பட வேண்டும் போன்றவை அமைச்சரிடம் கிராம மக்கள்  முன்வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X