Suganthini Ratnam / 2016 மே 09 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அபூ செய்னப்
இம்முறை அதிகமான மாணவர்கள் கல்வியியல்; கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சையை சிறந்த முறையில் நிறைவு செய்தபோதும், அவர்களுக்கான அனுமதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்மொழி மூல முஸ்லிம், தமிழ் மாணவர்கள் இது தொடர்பில் தனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாக கிராமிய பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடமே அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் பின்னடைவைக் கொண்டுள்ள மாவட்டமாகும். அம்மாவட்ட மாணவர்கள் மிகுந்த சிரமத்துடனும் அர்ப்பணிப்புடனும் கற்றவர்கள். கடந்த காலத்தில் யுத்த அவலம் அம்மாணவர்களைப் பெரிதும் பாதித்தது. இன்னும் அங்கு முக்கியமான பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
எனவே, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெறத் பூரண தகுதி இருந்தும், நேர்முகப் பரீட்சை வரை வந்த மாணவர்களுக்கு மாற்றுவழி தொடர்பில் கல்வி அமைச்சு பரிசீலிக்க வேண்டும்' என்றார்.
'இது தொடர்பாக எமது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது. இதன்போது, குறிப்பிட்ட பாடநெறிக்கு ஒரு மாணவரை உள்வாங்குவதற்கு அப்பாடநெறியைக் கற்பிக்கின்ற ஆசிரியர் 2018ஆம் ஆண்டு ஓய்வு பெற வேண்டும் எனவும் அதைக் கொண்டே வெற்றிடங்கள் கணிக்கப்படுகின்றன என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த மாணவர்கள் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தும் வகையில் அரசாங்கத் தொழிலை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, இந்த மாணவர்களின் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை பெற்றுத்தர வேண்டும்' எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago