Suganthini Ratnam / 2016 மே 03 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்திலுள்ள நூலகங்களை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு மாகாண சபை தயாராகவுள்ளதாக அம்மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண நூலகர் பணியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நூலகப் பணியாளர்களின் ஒன்றுகூடலும் கௌரவிப்பும் நிகழ்வும் மட்டக்களப்பு பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (02) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'நவீனமயமான இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் நூலகங்களை நவீனமயப்படுத்துவது அவசியமாகும்' என்றார்.
'மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு முக்கிய பகுதியாக நூலகம் விளங்குகின்றது. எனவே நூலகங்களின் வசதிகளை நூலகத்தின் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒத்த பணியாக நூலகர் பணி அமைந்துள்ளது. மாணவர்கள் நூலகத்திலும் தேவையான அறிவைப் பெற்றுக்கொள்கின்றனர்' எனவும் அவர் மேலும் கூறினார்.

56 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
5 hours ago