Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததாகக் கூறப்படும் 75 பேருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய டெங்கு நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் இன்று திங்கட்கிழமைவரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 43 பேருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஈ.ஸ்ரீநாத் தெரிவித்தார்.
இதேவேளை, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 32 பேருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.
55 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
7 hours ago