Princiya Dixci / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமும் இணைந்து செயற்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையைக் கட்டியெழுப்பும் செயற்திட்டமானது, இலங்கையில் உள்ளூராட்சி முறையை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி மற்றும் அபிவிருத்தி பங்காளர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படும் இரு நிகழ்ச்சித் திட்டமாகும்.
அதன் ஓர் அங்கமாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை வலுப்படுத்துகின்ற வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் நடத்தப்பட்ட தெரிவுப் போட்டியில் காத்தான்குடி நகர சபையானது பசுமை நகர் செயற்திட்டத்துக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தப் பெருந்திட்டத்தைத் தயாரிப்பதற்கான ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல், காத்தான்குடி ஹோட்டல் பீச் வே மண்டபத்தில் நேற்று (23) நடைபெற்றது.
இதில் இவ் வேலைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்படதோடு, எதிர்கால வேலைத்திட்டம் தெடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.
50 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago