2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பட்டதாரிகளின் கவனத்துக்கு

வ.துசாந்தன்   / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரிய வெற்றிடங்களுக்கு மாவட்ட அடிப்படையில் பட்டதாரிகளை  உள்ளீர்ப்பதற்காக நடத்தப்படவுள்ள திறந்த போட்டிப்பரீட்சைக்கான அறிவித்தலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அறிவித்துள்ளார்.

18 – 45 வயது வரையான பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியுமெனவும் தொழில் அற்ற பட்டதாரி அல்லது ஆட்சேர்ப்புக்காகக் குறைந்த தகைமையாக பட்டமொன்று பெற்றிருத்தல் அவசியமானதொன்றாகக் கொண்ட பதவியிலுள்ள உத்தியோகத்தர் தவிர  வேறு பதவியிலுள்ள பட்டதாரிகள், இப்பதவிக்காக விண்ணப்பிக்கலாம் போன்ற திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் செயலாளர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விவரங்களை, கிழக்கு மாகாண சபையின் இணையளத்தில் பார்வையிட முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .