2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பட்டதாரிகள் வழக்கு நவ. 6க்கு ஒத்திவைப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் உட்பட நால்வர் மீது, மட்டக்களப்பு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காந்திபூங்கா முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் நடத்திய கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது, மாவட்ட செயலகத்துக்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்தில், பொதுமக்களின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள், அரச கரும நடவடிக்கைகளுக்கும் குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள முற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில், மார்ச் மாதம் 7ஆம் திகதி இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில், இன்று (02) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட வேலையற்றப் பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த், அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தன்னான ஞானரத்ன தேரர் உட்பட நான்கு பேரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X