Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கலின் போது, மாறிமாறி வந்த அரசாங்கங்களால் பட்டதாரி பயிலுநர்களாகவே நியமனம் வழங்கப்பட்டது. எனினும், 2018இல் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனங்கள், நாடளாவிய ரீதியில், நிரந்தர நியமனமாக மாற்றிக் கொடுக்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பில் பல பட்டதாரிகளுக்கு அந்த நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
அவ்வகையான 29 பட்டதாரி பயிலுநர்கள் கிழக்கு மாகாணத்தின் பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையிலும் உள்வாங்கப்படாமல், தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வந்தனர்.
மேற்படி பட்டதாரி பயிலுநர்களுக்கு, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை ஆகியோரின் தொடர் முயற்சியால் நிரந்தர நியமனம் வழங்கப்படுவதற்கான நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக இரா.சாணக்கியன் கருத்துத் தெரிவிக்கையில் “பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் கல்வி கற்றுள்ள இவர்கள், தொழில் இல்லாமல் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
அத்துடன், “நானும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபையும் இணைந்து, பொதுநிர்வாக அமைச்சின் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்புகொண்டு, இவர்கள் நியமனம் பெறுவதற்கான நேர்முகப்பரீட்சை அழைப்புக் கடிதத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளோம்” என்றார்.
இந்த நேர்முகப்பரீட்சை பொதுநிர்வாக அமைச்சில், இம்மாதம் 11ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
40 minute ago
48 minute ago
53 minute ago