Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தினுடைய பட்டமளிப்பு விழாவுக்கு உள்ளீர்க்கப்படாத 26 மாணவர்களை உள்ளீர்க்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் எம்.பி.முகைதீன் உத்தரவிட்டார்.
2009 -2010ஆம் கல்வி ஆண்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 220 மாணவர்கள் கற்கையைப் பூர்த்திசெய்திருந்தனர்.
இவர்களுக்கான பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 10ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இவர்களில் 40 மாணவர்கள் சகல விடயங்களையும் பூர்த்திசெய்து பட்டமளிப்பு விழாவுக்குத் தகுதியான நிலையிலும், இப்பட்டமளிப்பு விழாவுக்கு உள்ளீர்க்கப்படவில்லை.
தங்களைப் பட்டமளிப்பு விழாவில் உள்ளீர்க்குமாறு கூறி 26 மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (30) மனுத்; தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஆராய்ந்த நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.
இம்மாணவர்களின் சார்பில் சட்டத்தரணிகளான பி.சந்தியா, ரொசானி முத்துக்கல ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய பிரபல சிரேஷ்;ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் நீதிமன்றத்தில் ஆஜராகி மாணவர்களின் கோரிக்கை சமர்ப்பணத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago