Mayu / 2024 ஜூலை 16 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மில்கோ பால் சேகரிப்பு நிறுவனத்தை தனியாருக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்து பால் பண்ணையாளர்கள் செவ்வாய்கிழமை (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு எருவில் பகுதியிலிருந்து கொள்கலன்களுடன் தேங்காய் உடைத்து கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இதுவரை காலமும் எதுவித தடைகளும் இன்றி மில்கோ பால் சேகரிப்பு நிலையத்திற்கு நாம் பாலை வழங்கி கொண்டு வருகிறோம் அதால் எமக்கு இதுவரையில் எதுவித இடர்பாடுகளும் இல்லை . எமக்கு மில்கோ நிறுவனம் வாராந்தம் முறையாக எமக்குரிய கொடுப்பனவு வழங்குகிறது. மேலும் எமக்கு பிள்ளைகளின் கற்றல், மரணச் செலவு, திருமணச்செலவு, உள்ளிட்ட பல செலவுகளுக்கும் மில்கோ நிறுவனத்தின் மேலதிக உதவிகளை நல்கி வருகின்றனர்.

எனவே இவ்வாறான நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவதை நாம் முற்றாக எதிர்கிறோம் எனவே இந்த விடயத்தை கருத்தில் கொண்டு மில்கோ நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவதை நிறுத்தா விட்டால் எமது போராட்டம் மேலும் தொடரும் என இதன்போது பாற் பண்ணையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
வ.சக்திவேல்
4 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
24 minute ago
1 hours ago