2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பணிநயப்பு விழா

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராஜாவின் பணிநயப்பு விழாவும் 'கருணை யோகம்' சிறப்பு மலர் வெளியீடும் எதிர்வரும் 24ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராஜாவின் தமிழ்மொழி, இலக்கியம் தொடர்பான ஆய்வுப் பணிகளைப் பாராட்டி இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 65க்கும் மேற்பட்ட கட்டுரை மற்றும் கவிதைகளையும் மலர்ப் பதிவுகளையும் 'கருணை யோகம்' சிறப்பு மலர் தாங்கியுள்ளது.  

கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸினால் தொகுக்கப்பட்ட இந்நூலில் புலம்பெயர்ந்தும் உள்நாட்டிலும் உள்ள அதிகாரிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோரின் ஆக்கங்கள் அடங்கியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X