2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘பந்தாடப்படும் செயலாளர்கள்’

வ.துசாந்தன்   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடமாற்றம் என்ற போர்வையில் கிழக்கு மாகாணத்தில் சிரேஷ்ட தரம்வாய்ந்த செயலாளர்கள் பந்தாடப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது, “இவ்வாறான செயற்பாடானது, 30 வருடங்களுக்கு மேலாக அரச நிர்வாகத்துக்கும் மாகாணசபைக்கும் யுத்தகாலத்திலும் கூட உழைத்த நல்ல சமூக சேவையாளர்களைப் பந்தாடுவதற்குச் சமானாகும்.

“இது அவர்களுக்கு மன உளச்சலையும் தோற்றுவிக்கும் செயற்பாடாகும். நேர்மையாகவும், உண்மையாகவும் உழைத்த அதிகாரிகளைக் கேவலப்படுத்தும் விடயமாகவே நான் பார்க்கின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X