2025 ஜூலை 16, புதன்கிழமை

ரயில் ஓட்டுநர்கள், தொழிற்சங்க நடவடிக்கை

Janu   / 2025 ஜூலை 16 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில்வே வண்ண சமிக்ஞை அமைப்பில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படாவிட்டால், எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி முதல் ரயில் ஓட்டுநர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக   லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் முதல் படியாக, மருதானை, களுத்துறை, வெயாங்கொடை மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களில் ரயில்களை சேவையிலிருந்து விலக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் அதிகாரிகள்  உரிய நடவடிக்கை எடுக்காததால், பயணிகள் மற்றும் சொத்துக்கள் பாதுகாப்பிற்காக ரயில் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

வண்ண சமிக்ஞை அமைப்பில் உள்ள குறைபாடுகளை அரசாங்கம் ஒரு தேசியப் பிரச்சினையாக கருதி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரயில்களை இயக்குவதற்கான வண்ண சமிக்ஞை அமைப்பு ஆறு தசாப்தங்களுக்கும் மேலானது என்றும், வண்ண சமிக்ஞைகள் தற்போது கடுமையான பழுதடைந்துள்ளதாகவும், இதனால் ரயில் ஓட்டுநர்கள் தவறான சமிக்ஞைகளைப் பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X