ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில், ரணவிரு சேவா அதிகாரசபையின் அனுசரணையுடன், பயனாளிகளுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகள், சிறந்த முறையில் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட மேலதிக செயலாளர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்கட்டமாக ரணவிரு சேவா அதிகாரசபையின் அனுசணையுடன், சுமார் 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 38 வீடுகள், தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கும், ஒரு வீடு சிங்களக் குடும்பத்துக்கும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
ரணவிரு சேவா பயனாளிக் குடும்பங்களின் நலன்களை அறிந்துகொள்ளும் பொருட்டு, வீட்டுத் திட்டத்தைப் பார்வையிடும் கள விஜயம், நேற்று (08) இடம்பெற்றது.
மாவட்ட மேலதிக செயலாளர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் கொக்கட்டிச்சோலைக்குச் சென்ற குழுவினர், அங்கு ரணவிரு சேவா பயனாளிக் குடும்பத்துக்காக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள வீட்டைப் பார்வையிட்டனர்.
இக்குழுவில் ரணவிரு சேவா மாவட்ட அலுவலர் ரீ.எச். கீர்திகா ஜயவர்தன, மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.சி. அப்துல் வஹாப் உள்ளிட்ட அலுவலர்கள் இடம்பெற்றிருந்தனர்.
வீட்டுத் திட்டத்தைப் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த மாவட்ட மேலதிக செயலாளர், “எந்தவொரு தனி அல்லது பொது அபிவிருத்தித் திட்டங்களிலும், பயனாளிகளின் பங்களிப்பு முழுமையானதாக இருக்குமாயின், அத்திட்டம் வெற்றிபெறும்.
“அந்த வகையில், ரணவிரு சேவா பயனாளிகள், தமக்குக் கிடைக்கப்பெற்ற உதவிகளைக் கொண்டு, சிறந்த முறையில் தமக்கான வீடுகளை நிர்மாணித்துள்ளார்கள். இந்த அர்ப்பணிப்புள்ள செயற்பாடு, பூரண திருப்தியளிக்கிறது” என்றார்.

15 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago