2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

பாரிய கடல் அரிப்பு ; பல கட்டடங்களுக்கு சேதம்

Janu   / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடல் அரிப்பு காரணமாக கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக பாரிய கட்டிடங்கள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடி கடற்கரை பிரதேசத்தில் குறித்த கடல் அரிப்பினால் மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மீன்பிடி படகுகளை கரையில் நிறுத்த முடியாமல் தூர இடங்களுக்கு எடுத்துச் சென்று நிறுத்தி உள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

கடற்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள பல மீனவர்களின் வாடிகளும் மீன்பிடி கட்டிடங்களும் குறித்த கடல் அரிப்பு காரணமாக பாரிய சேதத்துக்கு உள்ளாகி உள்ளன.

மீனவர்களின் வசதிக்காக கடற் தொழில் அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள மீனவர் எரிபொருள் நிரப்பு நிலையமும் கடல் அரிப்பு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது குறித்த கடல் அரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 ரீ எல்.ஜவ்பர்கான்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .