2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பரீட்சை நிலையங்களில் டெங்கு ஒழிப்பு புகை விசிறல்

எஸ். பாக்கியநாதன்   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் பரீட்சை நடத்தும் உத்தியோகத்தர்களின்  சுகாதார நலன் கருதி, டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை,  மட்டக்களப்பு நகரிலுள்ள பிரதான பாடசாலைகளில் நேற்று (13) இடம்பெற்றன.

கிழக்குப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக பொதுச் சுகாதார வைத்தியப் பணிமனை, மட்டக்களப்பு மாநகரசபை, மட்டக்களப்பு பொலிஸ் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவு என்பன இணைந்து, புனித மிக்கேல் கல்லூரி, மத்திய கல்லூரி, வின்சன் மகளிர் பாடசாலை மற்றும் சிசிலியா பெண்கள் பாடசாலைகளில், டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு,  புகை விசிறல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு நகரில் டெங்குவின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கோடு, இந்தப் புகை விசிறல் மற்றும் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ். அமுதபாலன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .