2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பறப்பிழந்த வண்ணாத்துப்பூச்சி நாளை பறக்கும்

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.மோகனதாஸ்

அரச நெடு நாடக விழாவில், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களின் “பறப்பிழந்த வண்ணாத்துப்பூச்சி” எனும் நாடகம், கொழும்பு - மருதானை எல் பிஸ்டன் அரங்கில் நாளை (25) மாலை 6:30 மணிக்கு மேடையேறவுள்ளது.

"நீ அழைத்ததாக ... ஒரு ஞாபகம் .... " என்ற வி.கெளரிபாலனின் சிறுகதையே இந்நாடகத்தின் மூலக்கதையாவதுடன், சி.ஜெயசங்கரின் களப் பயிற்சி புதிதளித்தல் முறையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் உருவாக்கப்பட்ட இந்நாடகத்தை, ஆங்கிலத்தில் எல்.எம்.பீலிக்சிம் தமிழில் வி.கெளரிபாலனும் ஆக்கியிருந்தார்.

இந்நாடகப் பனுவலை குறுந்திரை, சினிமாத் தயாரிப்பாளரும் நாடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான அ.விமல்ராஜ் தயாரித்து, நெறியாள்கை செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X