Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் நூர்தீன்
பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ள புதிய காத்தான்குடி, கப்பல் ஆலீம் வீதியிலுள்ள தாருள்அதர் பள்ளிவாயலை விடுவிக்குமாறு கோரி நேற்று (06) காத்தான்குடியில் ஹர்த்தால் இடம்பெற்றது. ஹர்த்தால் காரணமாக வர்த்தக ஸ்தாபனங்கள், சந்தைகள் மூடப்பட்டு, இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
இதன் போது, தாருள் அதர் பள்ளிவாயலுக்கு முன்பாக, அப்பகுதி பொதுமக்கள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ‘அல்லாஹ்வை சுஜுது செய்த பள்ளிவாயலை விடுவிக்கவும்’, ‘பொலிஸார் மீது பொதுமக்கள் வைத்த நம்பிக்கையை சீரழிக்க வேண்டாம்’, ‘இறைவனின் இல்லத்தை இல்லாமல் ஆக்காதே’,‘பொலிஸ் திணைக்களமே பள்ளிவாயல் புனிதத்தில் கறை பூசும் வரலாற்றை செய்யாதே’ போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகள் தொங்க விடப்பட்டிருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பொதுச் செயலாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம் சபீல் நழீமி கருத்துத் தெரிவிக்கும்போது கூறியதாவது;
“இப்பள்ளிவாயல் பொது மக்களின் நிதிப்பங்களிப்பில் கட்டப்பட்டதாக இந்தப் பள்ளிவாயலை பொலிஸார் கையகப்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை. இதைப் பொலிஸார் விடுவித்து, பொது மக்கள் தொழுவதற்கும் இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு ஆகியோரை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்” என்றார்.
இதன்போது அங்கு வந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி, இந்தப் பள்ளிவாயலுக்குள் பொலிஸார் வரமாட்டார்கள் எனத் தெரிவித்ததையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
37 minute ago
38 minute ago