Gavitha / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு துணுக்காய் பழையமுறிகண்டிக் கிராமத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதனால், பாதுகாப்பான போக்குவரத்து சூழலை உருவாக்கித் தருமாறு, கிராம மக்கள், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் துணுக்காய் பிரதேச செயலரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பழைய முறிகண்டிக் கிராமத்திலிருந்து கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், தென்னியங்குளம் ஆகிய கிராமங்களுக்குப் பயணிக்கும் வீதி பெரும் குன்றுங்குழியுமாக மாறியுள்ளதுடன் வீதிகளின் இருபுறமும் காடுகள் வளர்ந்து வீதியினை மூடியிருப்பதன் காரணமாக பகலில்கூட போக்குவரத்தில் ஈடுபட முடியாத அச்சநிலை காணப்படுகின்றது.
கடந்த காலங்களிலே வீதிக்கு அருகில் நின்ற யானைகளே மக்களைத் தாக்கியதாகவும் பணிக்கு வந்த கிராம அலுவலர் கூட யானையினால் துரத்தப்பட்டு உயிர்தப்பிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில் எமது கிராம மக்களின் பாதுகாப்பான போக்குவரத்து வழிகளை உருவாக்குமாறும் ஐயன்கன்குளம், தென்னியங்குளம், புத்துவெட்டுவான், கோட்டைக்கட்டியகுளம் ஆகிய கிராமங்களுக்கு பழையமுறிகண்டியிலுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறும் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலுள்ள எமது கிராம வீதிகளையும் புனரமைத்துத் தருமாறும் அம் மக்கள் கோரியுள்ளனர்.
மேலும் எமது கிராமத்துக்கு வருகைதரும் ஆசிரியர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். பழையமுறிகண்டிக் கிராமத்தில் தற்போது 46 குடும்பங்கள் வாழ்கின்றன.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago