Janu / 2023 செப்டெம்பர் 25 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் 18ம் கட்டைப்பகுதியில் திங்கட்கிழமை (25) காலை அதிகாலை வாழைச்சேனையிலிருந்து மீராவோடை வழியாக அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற வாழைச்சேனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ் மீது இனந்தெரியாத நபர்களால் தண்ணீர் போத்தல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பஸ்ஸில் கண்ணாடிகள் வெடித்துச்சிதறியுள்ளதுடன், நடத்துனரும் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
குறிப்பிட்ட தாக்குதலால் பஸ்ஸில் பயணம் செய்த பிரயாணிகள் பெரிதும் அசெளகரியத்தை எதிர்கொண்டுள்ளதுடன் தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எம்.அஹமட் அனாம்



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .