Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஏப்ரல் 06 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியிலுள்ள மாட்டுபாளையம் பகுதியில் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பஸ் சாரதியை கைது செய்துள்ளதாக நிந்தவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நிந்தவூர் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த 72 வயதுடைய அகமட் லெப்பை மீராலெப்பை என்பவரே உயிரிழந்துள்ளார்
பொத்துவில்லில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணித்த தனியார் பஸ் நிந்தவூர் மாட்டுபாளையம் சந்திக்கு அருகில் அதே திசையில் பயணித்த மோட்டர் சைக்கிளை பின்னால் மோதியதில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற வயோதிர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நிந்தவூர் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும், பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .