Princiya Dixci / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய வளாகத்தில் ஆயுதங்கள் இருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் பணிகளை முன்னெடுத்தனர்.
களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தின் அனுமதியுடன், வெல்லாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய வளாகத்தினுள் கனரக வாகன உதவியுடன், இன்று (10) தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.
வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி ஆனந்த சிறியின் தலைமையில், களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்தத் தேடுதலை மேற்கொண்டனர்.
எனினும், இந்தத் தேடுதலின்போது எவ்விதமான ஆயுதங்களும் மீட்கப்படாத நிலையில் தற்காலிகமாக தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026