2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்; ஒன்பது மாணவர்கள் பிணையில் விடுவிப்பு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

கிழக்குப் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தரை  தாக்கினார்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட 9 மாணவர்களையும்,   தலா ஐம்பதாயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறு, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் நீதவான் வி.தியாகேஸ்வரன், இன்று உத்தரவிட்டதுடன்,  மாணவர்களது வாக்கு மூலங்களை, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யுமாறும் கட்டளையிட்டார்.

இதேவேளை, குறித்த வழக்கு மீதான விசாரணையை, எதிர்வரும் செப்டெம்பர் 13க்கு ஒத்திவைத்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து 63ஆவது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்,  செவ்வாய்கிழமை (08) பிற்பகல் மாணவர்களால் நிர்வாகக் கட்டடம் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது, கடமையின் நிமிர்த்தம் தடுக்க வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர், எச்டி.சி.டி.ரணசிங்க (வயது 37) மாணவர்களால் தாக்கப்பட்டதில் அவரது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தால் ஏறாவூர்ப் பொலிஸில் முறைபாடு பசெய்யப்பட்டது.

முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபர்களான 9 மாணவர்களும் ஏறாவூர் பொலிஸாரினால் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டப்பட்டனர்.

இதன்போதே, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .